கொரோனாவில் இருந்து விடுபட்டு நிம்மதியாக வாழ இறைவனைப் பிரார்த்திப்போம் : சஹீட் எம். ரிஷ்மி
கொரோனா நோயைக் கட்டுப்படுத்த அரசாங்கம் எடுக்கும் அனைத்து முன்னெச்சரிக்கையான நடவடிக்கைகளுக்கும் ஆதரவளித்து தத்தம் வீடுகளில் இருந்து கொண்டு ஈதுல் பித்ர் பெருநாளைக் கொண்டாடும் எமது நாட்டு முஸ்லிம் மக்கள் அனைவருக்கும் எனது மனப்பூர்வமான பெருநாள் நல்வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொள்கின்றேன்.
என்று அகில இலங்கை வை. எம். எம். ஏ. பேரவையின் தேசிய தலைவர் சஹீட் எம். ரிஷ்மி தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவிக்கையில்
நாங்கள் புனித நோன்பு காலத்தில் கற்றுக் கொண்ட பாடங்களான பொறுப்புணர்வு ஒழுக்கமான வாழ்க்கை, மனித நேயம், நல்லிணக்கம், அர்ப்பணிப்பு , ஏழைகளுக்கு உதவுதல், இறைநேசம் என்பவற்றை நாம் வாழ் முழுக்க கடைபிடிக்க வேண்டும். நாங்கள் இஸ்லாத்தை முறையாகப் பின்பற்றும் போது ஒற்றுமை சாந்தி சமாதானம் உருவாகும். சமூகமொன்றின் முன்னேற்றத்திற்கு ஒற்றுமை அவசியம். சமூக ஒற்றுமைக்கு பங்கம் ஏற்படுத்தும் செயல்கள் ஷைத்தானிய செயல்களாகும். மற்றவர்களுடைய கருத்திற்கு மதிப்பளித்தல் பிறர் மீது நல்லெண்ணம் கொள்ளல், சகோதரத்துவ உணர்வு என்பன சமூக ஒற்றுமையை கட்டி எழுப்ப உதவும். எனவே இந்த விடயம் குறித்து நாங்கள் மிகவும் கவனம் செலுத்த வேண்டியது மிகமிக அவசியமாகும்.
கொரோனா தொற்று முழுமையாக நீங்கும் வரைக்கும் சுகாதார விதி முறைகளைப் பேணி சமூக விலகல், முகக் கவசம் முதலிய விடயங்களிலும் அரசாங்கத்தின் சுகாதார கட்டுப்பாட்டு நடைவடிக்கைளிலும் ஏனைய சமூகத்திற்கு முன்மாதிரிமிக்க சமூகமாக நாங்கள் இருத்தல் அவசியமாhகும்.
எனவே உலகையும் எமது நாட்டையும் ஆட்டிப் படைக்கும் கொரோனாவில் இருந்து விடுபட்டு நிம்மதியாகவும் சந்தோசமாகவும் வாழ்வதற்கு இத்திருநாளில் நாம் அனைவரும் இறைவனைப் பிரார்த்திப்போம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
(இக்பால் அலி)