வடக்கில் கொரோனாத் தொற்றுக்குள்ளாகி 3 கர்ப்பிணிகள் சிகிச்சையில்!

நாடு முழுவதும் 130 கர்ப்பிணிப் பெண்கள் கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர். வடக்கு மாகாணத்தில் தற்போது 3 பேர் கொரோனாத் தொற்றுக்குள்ளாகி சிகிச்சை பெற்று வருகின்றனர் என்று சுகாதாரத் திணைக்களத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதேவேளை, இதுவரையில் கொரோனாத் தொற்றாளர்கள் தொடர்பில் பொதுவான விவரங்களே சேகரிக்கப்பட்டு வந்தன. இன்றிலிருந்து தொற்றுக்குள்ளாகும் கர்ப்பிணிப் பெண்கள் தொடர்பான விவரங்கள் தனியாக வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்களத்தால் சேகரிக்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.