நினைவுத்தூபியை உடைப்பது அநாகரிகத்தின் உச்சக் கட்டம்!
“முள்ளிவாய்க்கால் முற்றத்தில் கல்லிலான ஒரு தூபியை மட்டும் உடைக்கவில்லை; இலட்சக்கணக்கான தமிழ் மக்களின் இதயங்களைத் தகர்த்திருக்கின்றது. மரணித்தவர்களின் நினைவுத் தூபியை உடைப்பதென்பது அநாகரிகத்தின் உச்சக் கட்டம்.”
இவ்வாறு தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பேச்சாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான ஜனாதிபதி சட்டத்தரணி எம்.ஏ.சுமந்திரன் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“முள்ளிவாய்க்கால் நினைவுத் தூபி உடைக்கப்பட்டதைத் தமிழ் தேசிய கூட்டமைப்ப வன்மையாகக் கண்டிக்கின்றது. இந்தச் செயலானது வெறுமனே கல்லிலான ஒரு தூபியை மட்டும் உடைக்கவில்லை; இலட்சக்கணக்கான தமிழ் மக்களின் இதயங்களைத் தகர்த்திருக்கிறது. மரணித்தவர்களின் நினைவுத் தூபியை உடைப்பதென்பது அநாகரிகத்தின் உச்சக் கட்டம்.
இராணுவமும் பொலிஸும் அந்த இடத்துக்கு வந்த பார்வையிட்ட பின்னர்தான் நினைவுத் தூபி உடைக்கப்பட்டுள்ளது. ஆனால், போரில் இறந்தவர்களை நினைவு கூருவதற்கு எவரும் தடை விதிக்க முடியாது. அந்த நினைவுகளை எந்த உத்தரவும் மழுங்கடிக்கவும் முடியாது. நாம் முள்ளிவாய்க்கால் நினைவேந்தலைச் செய்வோம் – எவராலும் தடுக்க முடியாதபடி செய்வோம்” – என்றார்.