அட்சய திரிதியை இந்த நாளுக்கு பலரும் பற்பல காரணங்கள்,
இந்த நாளுக்கு பலரும் பற்பல காரணங்கள், புராண கதைகள் சொன்னாலும், இதை மிக முக்கிய நாளாக கருத காரணமிருக்கிறது. அதை அறியலாம் தொடர்ந்து படிங்க.
அட்சயம் எனில் வளருதல் அல்லது குறையாமல் இருத்தல் என பொருள். இதில் திரிதியை என்பது ஒரு வகை திதி. ஆகவே வளர்ச்சியை கொடுக்கும் திதி என்பதே இதன் பொருள். இந்த திதி ஏன் வளர்ச்சியை கொடுக்க வேண்டும் என ஆராய்ந்தால்… திதிகள் அனைத்தும் நிலவின் தன்மை கூறுவதால், அட்சய என்பதற்கு இன்னொரு அர்த்தமாக வளர்பிறை என்றும் கூறலாம். ஆதாவது வளர்பிறை திரிதியை. மேலும் இந்த திரிதியை எனும் திதியே தமிழ் புத்தாண்டு தொடங்கி வரும் முதல் வளர்பிறை திதி என்பதே இதன் பின் இருக்கும் சூட்சுமம்.
ஆண்டில் முதல் வளர்பிறை என்பதால் இதனை கொண்டாடி மகிழ்கின்றனர்.
இந்நாளில் அத்தியாவசிய தேவைகள் (உணவு, உடை மற்றும் கல்விக்கு ஆதாரமான புத்தகங்கள்) இன்றி தவிப்பவருக்கும் அதனை வாங்க இயலாதவருக்கும், நமது கைகளால் தானமளித்து, அவர்களிடம் ஆசி பெறுதல் அல்லது மகிழ்வித்தல் நன்மை தரும்.
மகிழ்வித்து மகிழ் என்பதை சூசகமாக சொல்வதே இந்த அட்சய திரிதியை.