வவுனியா – யாழ் வீதியில் வீசப்பட்ட நிலையில் வங்கிகளின் காசோலைகள்

வவுனியா – யாழ் வீதியில் பல வங்கிகளின் காசோலைகள் வீதி ஓரங்களில் இன்று (14) காலை வீசப்பட்ட நிலையில் காணப்பட்டுள்ளன.
2014 ஆம் ஆண்டுக்கு உரிய குறித்த காசோலைகள் பல வங்கிகளுக்கு உரியதாக காணப்பட்டதுடன் அவை அரச திணைக்களங்கள் மற்றும் தனியார் நிறுவனங்களுக்கு உரியதாகவும் காணப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
அதிகளவான காசோலைகள் மட்டக்களப்பு பகுதியை சேர்ந்ததாக காணப்படுவதனால் ஏன் வவுனியாவில் குறித்த காசோலைகள் வீசப்பட்டுள்ளது என அப்பகுதி மக்கள் சந்தேகம் வெளியிட்டுள்ளனர்.