முள்ளிவாய்க்கால் நினைவுத்தூபியை அடித்துடைக்க வேண்டிய தேவை எமக்கு இல்லை!

முள்ளிவாய்க்காலில் அமைக்கப்பட்டுள்ள நினைவுத் தூபி உடைக்கப்பட்ட சம்பவத்துக்கும் தமக்கும் எந்தவித தொடர்பும் கிடையாது என இராணுவ ஊடகப் பேச்சாளர் பிரிகேடியர் நிலந்த பிரேமரத்ன ஊடகங்களிடம் தெரிவித்தார்.
பல வருடங்களுக்கு மேலாக குறித்த நினைவுத் தூபி அந்த இடத்தில் காணப்பட்ட போதிலும், இராணுவம் அந்த நினைவுத் தூபியை உடைக்கவில்லை எனவும் அவர் குறிப்பிட்டார்.
அவ்வாறான பின்னணியில், தற்போது அந்த நினைவுத் தூபியை உடைக்க வேண்டிய தேவை தமக்குக் கிடையாது எனவும் அவர் மேலும் கூறினார்.