PCR பரிசோதனைகளின் பின் பரிசோதனை முடிவுகள் கிடைக்கும் வரை வீடுகளில் இருத்தல் வேண்டும்

PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதன் பின்னர் பரிசோதனை முடிவுகள் கிடைக்கும் வரையில் வீடுகளில் தனிமைப்படுத்தலில் இருக்குமாறும் கிளிநொச்சி மாவட்ட அரசாங்க அதிபர் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
கிளிநொச்சி மாவட்டச்செயலகத்தில் இன்றைய தினம் மாவட்ட அரசாங்க அதிபர் திருமதி.றூபவதி கேதீஸ்வரன் அவர்களுடனான ஊடக சந்திப்பு இடம்பெற்றது.
இந்த ஊடக சந்திப்பில் கருத்துதெரிவித்த அரசாங்க அதிபர் அவர்கள் எமது மாவட்டத்தினை பொறுத்தவரையில் பொதுமக்கள் தமது அன்றாட கடமைகளை தேவையின் நிமிர்த்தமாக மேற்கொள்கின்ற அதேவேளையில் தேவையற்ற விதத்தில் பயணங்களை மேற்கொள்வதை தவிர்ப்பதோடு விரும்பத்தகாத செயல்களில் ஈடுபடுவதனை தவிர்த்து சமூகப்பொறுப்புடன் செயற்படுமாறும் கேட்டுக்கொண்டார்.
மேலும் PCR பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டதன் பின்னர் பரிசோதனை முடிவுகள் கிடைக்கும் வரையில் வீடுகளில் தனிமைப்படுத்தலில் இருக்குமாறும் பொதுமக்களுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
அவ்வாறு செய்வதன் ஊடாக ஏனையோருக்கு தொற்று பரவாமல் தடுக்ககூடிய சமூக பொறுப்புள்ள மனிதர்களாக சுகாதார பழக்கவழக்கங்களை கைவிடாது தொடர்ந்தும் பின்பற்றி தொற்று பாதிப்பிலிருந்து சமூகத்தினை பாதுகாக்க அனைவரும் சமூகபெறுப்புடன் நடந்துகொள்ளுமாறும் கேட்டுக்கொண்டார்.