அத்தியவசிய தேவை நிமித்தம் பயணங்களை மேற்கொள்வோருக்கான அனுமதிப்பத்திரம் வழங்கும் நடவடிக்கை.

மாவட்டங்களுக்கிடையே அத்தியவசிய சேவை மற்றும் அத்தியவசிய தேவை நிமித்தம் பயணங்களை மேற்கொள்வோருக்கான அனுமதிப்பத்திரம் வழங்கும் நடவடிக்கை திருகோணமலை மாவட்டத்தில் அரசாங்க அதிபர் சமன் தர்சன பாண்டிகோராளவின் வழிகாட்டலுக்கமைய மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.
அதன்படி குறித்த அனுமதிப்பத்திரத்திற்கான விண்ணப்படிவத்தை பிரதேச செயலகங்களில் பெற்று பூர்த்திசெய்து குறித்த விண்ணப்பபடிவத்தில் குறிப்பிடப்பட்ட உத்தியோகத்தர்களிடம் சிபாரிசினை பெற்று மாவட்ட செயலகத்தில் கையளித்தல் வேண்டும்.
பின்னர் குறித்த விண்ணப்பபடிவத்தில் குறிப்பிடப்பட்ட விண்ணப்பதாரிக்கு உரிய பயண அனுமதிப்பத்திரம் வழங்கப்படும்.
சுகாதார நடைமுறைகளைப்பின்பற்றி மக்களது குறித்த தேவைகள் நிறைவேற்றப்பட்டு வருகின்றது.