தேசிய அடையாள அட்டை இலக்க நடைமுறையை மீறியோர் பலர் கைது.
தேசிய அடையாள அட்டை இலக்க நடைமுறையை மீறியோர் உட்பட நடைமுறையில் உள்ள தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் மேலும் 340 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இலங்கையில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டில் கைது செய்யப்படு வருபவர்களது எண்ணிக்கை தொடர்ச்சியாக அதிகரித்து வருகின்றது.
அந்த வகையில், இன்று காலையுடன் நிறைவு பெற்ற கடந்த 24 மணி நேரத்தில் தனிமைப்படுத்தல் விதிகளை மீறிய குற்றச்சாட்டின் அடிப்படையில் 340 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறை ஊடகப் பேச்சாளரும், பிரதி காவல்துறை மா அதிபருமாகிய அஜித் ரோஹண தெரிவித்தார்.
இவ்வாறு கைது செய்யப்பட்டவர்களில், தற்போது நடைமுறையில் உள்ள தேசிய அடையாள அட்டையின் இறுதி இலக்கத்தின் அடிப்படையில் வெளிச்செல்லும் அனுமதி முறையை மீறிய குற்றச்சாட்டில் 99 பேர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
இதையடுத்து கடந்த ஒக்டோபர்-30 ஆம் திகதி முதல் இதுவரை கைது செய்யப்பட்டவர்களது மொத்த எண்ணிக்கை 10 ஆயிரத்து 413 ஆக அதிகரித்துள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.