கொழும்பு துறைமுக நகரில் 75 வீதமான இலங்கையர்களுக்கு தொழில் வாய்ப்பு.
கொழும்பு துறைமுக நகரில் ஏற்படுத்தப்படவுள்ள தொழில்;வாய்ப்புக்களில் 75 வீதமான தொழில் வாய்ப்புக்கள் இலங்கையர்களுக்கே உரித்தாக வேண்டும் என சரத்தை உள்வாங்க எதிர்பார்த்துள்ளதாக பிரதமர் மஹிந்த ராஜபக்ஸ தெரிவிக்கின்றார்.
இந்த தொழில்வாய்ப்புக்களின் போது, இலங்கையர்களுக்கு அதற்கான திறன்கள் இல்லாத பட்சத்தில் மாத்திரம், அந்த நிபந்தனைகளை தளர்த்துவதற்கு ஆணைக்குழுவிற்கு சந்தர்ப்பம் வழங்கப்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
கொழும்பு துறைமுக நபர் பொருளாதார ஆணைக்குழுவின் சட்டமூலம் மீதான விவாதத்தில் இன்று கலந்துக்கொண்டு உரையாற்றிய போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
அதேவேளை , கொழும்பு துறைமுக நகர் பொருளாதார ஆணைக்குழுவில் பெரும்பான்மையாக இலங்கையர்கள் இருக்க வேண்டும் என்பதுடன், அதன் தலைமை பதவியும் இலங்கையர் ஒருவருக்கே கிடைக்க வேண்டும் என்ற யோசனையையும் சட்டமூலத்தின் ஊடாக உறுதிப்படுத்த எதிர்பார்த்துள்ளதாக பிரதமர் கூறியுள்ளார்.
கொழும்பு துறைமுக நகரின் ஊடாக சுமார் 2 லட்சம் தொழிவாய்ப்புக்கள் முதல் ஐந்து வருட காலப் பகுதியில் கிடைக்கும் என கணிப்பிடப்பட்டுள்ளதாக பிரதமர் குறிப்பிடுகின்றார்.
மேலும் ,அத்துடன், கொழும்பு துறைமுக நகரை திட்டத்தின் ஊடாக எதிர்வரும் ஐந்து வருட காலத்திற்குள் குறைந்தது 15 பில்லியன் அமெரிக்க டொலர் முதலீட்டை பெற்றுக்கொள்ள எதிர்பார்ப்பதாகவும் பிரதமர் தெரிவிக்கின்றார்.