இன்று புதுவருட கொவிட் கொத்தணி 3051 நபர்களுக்கு தொற்று.

இலங்கையில் மேலும் 3,051 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக இராணுவத் தளபதி ஜெனரல் ஷவேந்திர சில்வா தெரிவித்துள்ளார்.
இவர்கள் அனைவரும் புதுவருட கொவிட் கொத்தணி உடன் தொடர்புடையவர்கள் என அவர் தெரிவித்தார்.
அதன் அடிப்படையில் இலங்கையில் இதுவரையில் 150,771 பேருக்கு கொரோனா தொற்று உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.