இஸ்ரேல் எங்களிடம் இராணுவ ஆதரவை கோரவில்லை அமெரிக்க இராணுவ தளபதி.
இஸ்ரேல் பாலஸ்தீனத்தினர்களுக்கு இடையிலான மோதல் கடந்த ஒரு வாரத்துக்கும் மேலாக நீடித்து வருகிறது.
இந்த மோதலில் இஸ்ரேலுக்கு தனது ஆதரவை அமெரிக்கா வெளிப்படுத்தி வருகிறது.மேலும் இஸ்ரேல் நாட்டிற்கு 5 ஆயிரத்து 381 கோடி ரூபாய்க்கு ஆயுதங்களை விற்பனை செய்ய ஜோ பைடன் நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில் காசாவுக்கு எதிரான இந்த நடவடிக்கையில் அமெரிக்காவின் இராணுவ உதவியை இஸ்ரேல் கோரவில்லை என்று அமெரிக்க இராணுவ தளபதி மற்றும் செய்தி தொடர்பாளர் ஜான் கிர்பி தெரிவித்துள்ளார்.
ஜான் கிர்பி கூறுகையில், “இஸ்ரேல் எங்களிடம் இராணுவ ஆதரவை கோரவில்லை.தற்பாதுகாப்புக்காக இஸ்ரேல் எடுத்து வரும் நடவடிக்கைக்கு நாங்கள் தொடர்ந்து ஆதரவாளிப்போம். மேலும் இஸ்ரேலுக்கும் அமெரிக்காவுக்கும் இடையே வலுவான இருதரப்பு இராணுவ உறவு இருக்கிறது என அவர் தெரிவித்தார்.