இலங்கைக்குவரும் சகல பயணிகளுக்கும் தடை.

தற்போதைய கொரோனா நிலைமையை கருத்திற்கொண்டு மே 21ஆம் திகதி இரவு 11.59 மணி தொடக்கம் மே 31 இரவு 11.59 மணிவரையான காலப்பகுதியில் இலங்கை வருவதற்காக பயணிகளுக்கு தற்காலிகமாக தடை விதிக்கப்பட்டுள்ளதாக சிவில் விமான சேவைகள் அதிகாரசபையின் தலைவர் உபுல் தர்மதாச தெரிவித்துள்ளார்.
அதேவேளை இலங்கையில் இருந்து வெளிநாடுகளுக்கு செல்வோர் வழமையான சுகாதார வழிமுறைகளை பின்பற்றி செல்லலாம்.