பலஸ்தீனம் மீதான திட்டமிட்ட இன அழிப்பை உடன் நிறுத்து – சபையில் வலியுறுத்திய சஜித்
“இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனம் இரு இராச்சியங்களாக அங்கீகரிக்கப்பட்டு மத்திய கிழக்கில் உருவாகியுள்ள அதிகாரப் போராட்டத்துக்குத் தீர்வு காணப்படவேண்டும். அதேபோல் பலஸ்தீனம் மீதான திட்டமிட்ட இன அழிப்பை மேற்கொள்ளும் நடவடிக்கை உடனடியாக நிறுத்தப்பட வேண்டும்.”
– இவ்வாறு வலியுறுத்தினார் எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாஸ.
நாடாளுமன்றத்தில் இஸ்ரேல் – பலஸ்தீன் விவகாரம் குறித்து சபையில் பேசும்போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“காஸா பகுதியில் இஸ்ரேல் – பலஸ்தீன மோதலின் காரணமாக பலஸ்தீன் பகுதியில் பாரிய அளவிலான இன அழிப்பு இடம்பெற்று வருகின்றது. இது உண்மையில் ஓர் இன அழிப்பாகும்.
இந்தப் பிரச்சினைக்கு இருக்கும் ஒரே தீர்வு இரு இராச்சிய உருவாக்கமாகும். இஸ்ரேல் மற்றும் பலஸ்தீனம் இரு இராச்சியங்களாக அங்கீகரிக்கப்பட்டு மத்திய கிழக்கில் உருவாகியுள்ள அதிகாரப் போராட்டத்துக்குத் தீர்வு காணப்பட வேண்டும்.
அதேபோல் பாதிக்கப்பட்ட பலஸ்தீன மக்களுக்காக நாம் குரல் கொடுக்கின்றோம். அதுமட்டுமல்ல ஹிட்லர் காலத்தில் யூதர்களுக்கு எதிராக முன்னெடுக்கப்பட்ட இன அழிப்பையும் மறந்துவிடக்கூடாது. அதனையும் நாம் நினைவுபடுத்துகின்றோம்.
எனவே, இப்போதுள்ள நிலையில் இரு நாடுகள் உருவாக்கப்பட்டு தீர்வு பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் என்ற நிலைப்பாட்டில் நாம் உள்ளோம். அதேபோல் பலஸ்தீன் மக்களுக்கு எதிராக முன்னெடுக்கும் இன அழிப்பை நாம் வன்மையாகக் கண்டிப்பதுடன் அவர்களுக்காகக் குரல் கொடுக்க நாம் தயாராகவுள்ளோம்” – என்றார்