குடிவரவு – குடியகல்வுத் திணைக்களம் மறு அறிவித்தல் வரை இழுத்து மூடல்!
குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களத்தின் தலைமை அலுவலகம் மற்றும் பிராந்திய அலுவலகங்கள் மறு அறிவித்தல் வரை மூடப்படுகின்றன என்று அறிவிக்கப்பட்டுள்ளது.
இலங்கையில் அதிகரித்து வரும் கொரோனா பரவல் காரணமாக இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என குடிவரவு மற்றும் குடியகல்வு திணைக்களம் தெரிவித்துள்ளது.
எனினும், அத்தியாவசிய தேவைகளுக்காக வேலை நாட்களில் காலை 8 மணி முதல் மாலை 4.30 மணி வரையில் கீழ் உள்ள தொலைபேசி இலக்கத்தின் ஊடாக உரிய பிரிவைத் தொடர்பு கொண்டு, ஆலோசனைகளை பெற்றுக்கொள்ள முடியும் எனத் திணைக்களம் அறிவித்துள்ளது.