தரமுயர்த்தப்பட்டுள்ள பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் வலயக்கல்வி பணிப்பாளர்களுடனான விசேட கலந்துரையாடல்!
ஜனாதிபதியின் “நாட்டைக் கட்டியெழுப்பும் சுபீட்சத்தின் நோக்கு” எனும் கொள்கை பிரகடனத்திற்கு அமைவாக மட்டக்களப்பில் தரமுயர்த்தப்பட்டுள்ள பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் வலயக்கல்வி பணிப்பாளர்களுடனான விசேட கலந்துரையாடலொன்று 21.05.2021 ஆந் திகதி வெள்ளிக்கிழமை மட்டக்களப்பில் இடம்பெற்றது.
இராஜாங்க அமைச்சர் சதாசிவம் வியாழேந்திரன் தலைமையில் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில் இடம்பெற்ற விசேட கலந்துரையாடலில் இராஜாங்க அமைச்சர் தலைமைதாங்கும் பிரதேச அபிவிருத்திக்குழு பிரிவுகளிற்குட்பட்ட தேசிய பாடசாலையாக தரமுயர்த்தப்பட்டுள்ள பாடசாலைகளின் அதிபர்கள் மற்றும் வலயக்கல்வி பணிப்பாளர்களும் கலந்துகொண்டிருந்தனர்.
இதன்போது தரமுயர்த்தப்பட்டுள்ள பாடசாலைகளில் நிலவும் குறைபாடுகள் தொடர்பாக பாடசாலை அதிபர்கள் மற்றும் வலயக் கல்விப் பணிப்பாளர்களிடம் கேட்டறிந்துகொண்ட இராஜாங்க அமைச்சர், குறித்த பாடசாலைகளில் எதிர்காலத்தில் மேற்கொள்ளவுள்ள அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பாகவும் இதன்போது கலந்துரையாடினார்.