இஷாக் ரஹ்மான், அலிசப்ரி ரஹீமைத் தூக்கி வீசியது ரிஷாத் கட்சி.
அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் கட்சியில் இருந்து பாராளுமன்ற உறுப்பினர்களான இஷாக் ரஹ்மான் மற்றும் அலிசப்ரி ரஹீம் ஆகியோர் இடைநிறுத்தப்பட்டுள்ளனர்.
கட்சியின் மத்திய குழு தீர்மானத்துக்கு எதிராக, அரசின் போர்ட் சிட்டி சட்டமூலத்துக்கு ஆதரவாக வாக்களித்த காரணத்தால் இவர்கள் இடைநிறுத்தப்பட்டுள்ளனர் என்று கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் ஒருவர் தெரிவித்துள்ளார்.
கட்சியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரிஷாத் பதியுதீன் குற்றப் புலனாய்வுப் பிரிவினரால் தடுத்து வைக்கப்பட்டுள்ள நிலையில், பதில் தலைவர் சட்டத்தரணி என்.எம்.ஷஹீட் தலைமையில், ‘கொழும்புத் துறைமுக நகர பொருளாதார சட்டமூலத்துக்கு ஆதரவாக வாக்களிப்பதில்லை’ என்ற தீர்மானம் எடுக்கப்பட்டிருந்தது.
எனினும், குறித்த பாராளுமன்ற உறுப்பினர்கள் இருவரும் அரசுக்கு ஆதரவாக – சட்டமூலத்துக்கு ஆதரவளிக்க வாக்களித்திருந்தனர்.
இதன் காரணமாக, பாராளுமன்ற உறுப்பினர்களான இஷாக் ரஹ்மான் மற்றும் அலிசப்ரி ரஹீம் ஆகியோரின் கட்சி உறுப்புரிமையை இடைநிறுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.