சீனாவின் கொலனியாகிவிட்டது இலங்கை! இது மிகப்பெரிய காட்டிக்கொடுப்பு! – சந்திரிகா கடும் சீற்றம்.
கொழும்புத் துறைமுக நகர சட்டமூலம் ஊடாக இலங்கையைச் சீனாவின் கொலனியாக்கிவிட்டனர் என்று முன்னாள் ஜனாதிபதி சந்திரிகா பண்டாரநாயக்க குமாரதுங்க தெரிவித்தார்.
இது தொடர்பில் கொழும்பில் இன்று ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“அந்நியர்களின் ஆக்கிரமிப்பிலிருந்து பெரும் போராட்டங்களுக்கு மத்தியிலேயே எமது நாட்டுக்கு 1948 இல் சுதந்திரம் கிடைத்தது. அதன்பின்னர் 1972 இல் நாடு முழுமையாக சுதந்திரம் அடைந்தது. இந்நிலையில், கொழும்புத் துறைமுக நகர சட்டமூலம் ஊடாக இலங்கையைச் சீனாவின் கொலனியாக்கிவிட்டனர்.
இந்தச் சட்டமூலத்துக்கு ஆதரவு வழங்கியதன் மூலம் மீண்டுமொரு மிகப்பெரிய காட்டிக்கொடுப்பை ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைவர் மைத்திரிபால சிறிசேன செய்துள்ளார். ஶ்ரீலங்கா சுதந்திரக்கட்சியை அவர் மொட்டு கட்சியிடம் அடகு வைத்துள்ளார். கட்சி கொள்கை மற்றும் ஆதரவாளர்களையும் காட்டிக்கொடுத்துவிட்டார்” – என்றார்.