பயணத் தடை அமுலில் இருக்கும் போது வைத்தியசாலை செல்ல அனுமதி.

பயணத் தடை அமுலில் இருக்கும் காலப்பகுதியில் எவருக்காவது சுகயீனம் ஏற்பட்டால் வைத்தியசாலை அல்லது மருந்தகங்களுக்குச் செல்வதற்கு அனுமதி வழங்கப்பட்டிருப்பதாக பொலிஸ் ஊடாகப் பேச்சாளரான பிரதிப் பொலிஸ் மா அதிபர் அஜித் ரோஹன தெரிவித்துள்ளார்.
பயணத் தடை காரணமாக வீதிச் சேதனை நடவடிக்கையில் பொலிசார் ஈடுபட்டுள்ளனர். இந்தக் காலப்பகுதியில் தனிமைப்படுத்தல் விதிமுறைகளை மீறுபவர்களுக்கு எதிராக சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்படும் என்றும் அஜித் ரோஹன மேலும் தெரிவித்தார்