வடக்கில் கொரோனாத் தரவுகளைத் திரட்ட மருத்துவர்கள் நியமனம்!

கொரோனா வைரஸ் தொற்றுத் தொடர்பான தகவல்களைத் திரட்டவும் அவற்றை ஒருங்கிணைக்கவும் வடக்கு மாகாணத்துக்குச் சுகாதார அமைச்சால் மருத்துவர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் கடமைகளையும் பொறுப்பேற்றுள்ளனர்.
இலங்கையில் மேல் மாகாணம் தவிர்ந்த ஏனைய மாகாணங்களில் கொரோனாத் தொற்றாளர்கள் அதனுடன் தொடர்புடைய ஏனைய விவரங்கள் உரியவாறு சேகரிக்கப்படுவதில்லை.
இந்தநிலையில், சுகாதார அமைச்சு நாடு முழுவதிலும் இதற்காக பயிற்றுவிக்கப்பட்ட மருத்துவர்களை நியமித்துள்ளது.
வடக்கின் 5 மாவட்டங்களுக்கு ஒவ்வொருவரும், வடக்கு மாகாண சுகாதாரத் திணைக்களத்துக்கு ஒருவருமாக 6 பேர் நியமிக்கப்பட்டுள்ளனர்.
மேலும், சுகாதார அமைச்சுடன் ஒருங்கிணைப்புக்களை மேற்கொள்ள வடக்கின் ஒவ்வொரு மாவட்டங்களுக்கும் 5 மருத்துவ அதிகாரிகள் நியமிக்கப்பட்டுள்ளனர்.