கொழும்பு துறைமுகத்தின் கொள்கலன் இறக்கும் பணியில் தடங்கல்.
நாட்டில் தற்போது ஏற்பட்டுள்ள காலநிலை மாற்றத்தின் காரணமாக கொழும்பு துறைமுகத்தின் கொள்கலன் இறக்கும் பணிகள் நேற்று(24) பிற்பகல் மூன்று மணியில் இருந்து தற்போது வரை தடைப்பட்டு உள்ளதாக தெரியவந்துள்ளது.
துறைமுகத்திற்கு அண்மித்து கடற்பிரதேசத்தில் காற்றின் வேகம் மணித்தியாலத்திற்கு 60 70 வேகத்தில் வீசுவதால் கொழும்பு துறைமுகத்தில் மூன்று முறைகளில்(CICT, SLPA, SAGT) இருந்தும் முடிவுற்ற கப்பல்கள் வெளியில் செல்ல முடியாமலும் உள் வரவேண்டிய சுமார் பத்திற்க்கு மேற்பட்ட கப்பல்கள் உள் வரமுடியாமலும் தடங்கல் ஏற்ப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.