இந்தியாவில் கரை ஒதுங்கிய மாதகல் மீனவர் இருவர் மீட்பு!
யாழ்ப்பாணம், மாதகலில் இருந்து கடற்றொழிலுக்குப் புறப்பட்ட மீனவர்கள் அதிக காற்றுக் காரணமாக இந்தியாவில் கரை ஒதுங்கிய நிலையில் பிறிதொரு படகு சென்று அவர்களைப் பத்திரமாக ஏற்றி வந்தது.
மாதகலில் இருந்து கடந்த 21ஆம் திகதி மீன்பிடிக்கச் சென்ற இரு மீனவர்கள் அதிக காற்றுக் காரணமாக இந்தியாவில் கரை ஒதுங்கினர்.
இது தொடர்பில் மாதகலில் உள்ள சக மீனவர்களுக்கு அறிவித்த நிலையில் அவர்களில் இருவர் மாதகலில் இருந்து பிறிதொரு படகில் 23ஆம் திகதி சென்று இந்தியாவில் கரை ஒதுங்கிய படகையும், மீனவர்கள் இருவரையும் பத்திரமாக மீட்டு வந்துள்ளனர்.
இவ்வாறு இந்தியக் கரையை அடைந்த மீனவர்கள் மற்றும் மீட்புக்குச் சென்றவர்கள் என நான்கு மீனவர்களும் தற்போது சுய தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.