கடும் காற்றினால் பப்பாசி மரங்கள் முழுமையாக அழிந்தது. விவசாயியின் துயரம்.
வவுனியா வடக்கு நெடுங்கேணி ஒலுமடுவைச் சேந்தவர் துரைாசா தமிழ்ச்செல்வன் 29 வயதான இவர் ஒரு இளம் விவசாயி. தனது தோட்டத்தில் இம் முறை 1000 ஆயிரம் பப்பாசிகளை வைத்து பராமரித்து இதுவரை ஜந்து இலட்சம் வரை செலவு செய்துள்ள நிலையில் ஜந்து தடவைகள் மாத்திரமே பழங்களை விற்பனை செய்துள்ள நிலையில் (25) வீசிய கடும் காற்று காரணமாக அவரது தோட்டத்தில் உள்ள 1000 பப்பாசிகளில் 600 மேற்பட்ட மரங்கள் முறிந்து வீழந்துள்ளன.
இதனால் பெரும் நட்டமடைந்த நிலையில் விரக்கத்தியில் காணப்படும் இவருக்கு
சுமார் 20 இலட்சம் வரை நட்டம் ஏற்பட்டுள்ளது எனத் தெரிவித்துள்ளார்.
இந்த அழிவு தொடர்பில் அவர் தனது முகநூல் பக்கத்தில் ”விவசாயமும் மசிறும்
செயற்கையாளையும் அழிவு இயற்கையாளையும் அழிவு பப்பாசிப்பழம்
விற்பனைசெய்யமுடியாமல் தவித்துக்கொண்டிருந்தபோது இன்று வீசிய கடும் காற்றின் தாண்டவம், ஈடுசெய்யமுடியாத பேரிழப்பை உண்டாக்கியுள்ளது” என
பதிவிட்டுள்ளமை அவரது துயரத்தை வெளிப்படுத்தியுள்ளது.
கொரோனா பயணத் தடை காரணமாக பப்பாசி பழங்களை விற்பனை செய்ய முடியாத நிலையில் ஒவ்வொரு மரங்களிலும் அதிகமான பழங்கள் காணப்பட்டதாகவும் இதன் காரணமாக மரங்கள் அதிக சுமையுடன் இருந்த நிலையில்(25) வீசிய கடும் காற்று அந்த மரங்களை முறித்து சாய்த்துள்ளது எனத் தெரிவிக்கின்றார்.
உற்பத்திச் செலவை கூட பெற்றுக்கொள்ள முன்னர் இப்படியொரு அழிவை தான்
எதிர்பார்க்கவைில்லை எனவும் கவலையுடன் தெரிவித்துள்ளார் .