வவுனியா புதுக்குளம் மகாவித்தியாலயம் தேசிய பாடசாலையாக தரம் உயர்வு.

நீண்ட நாற்களாக வவுனியா புதுக்குளம் மகாவித்தியாலயம் தேசிய பாடசாலையாக தரமுயர்த்தப்படவேண்டும் என்று பாடசாலை அதிபர் அவர்கள் எம்மிடம் பல தடவை கோரிக்கை வைத்துள்ளார்.
மேன்மை தங்கிய ஜனாதிபதி அவர்களின் எண்ணக் கருவிற்கமைய, கெளரவ அமைச்சர் அவர்களின் செயற்பாட்டில் 1000 பாடசாலை திட்டத்தில், எமது கோரிக்கை ஏற்றுக்கொள்ளப்பட்டு,
இன்று அதற்கான உத்தியோகபூர்வ அனுமதியும் கிடைக்கப்பெற்றது.
இன்று, அமைச்சின் செயலாளர் அவர்களின் தலைமையில் நடைபெற்ற Zoom Meeting இல் எமது கோரிக்கைக்கு உத்தியோகபூர்வமான அனுமதி கிடைக்கப்பெற்றது.
பல மில்லியன் ரூபா செலவில் புதிய கட்டிடங்களுடன், நவீன வசதிகள் செய்துகொடுக்கப்பட உள்ளன. அதற்கான மாதிரி கணினி வடிவமைப்பு படங்களும் எம்மிடம் இன்று காண்பிக்கப்பட்டது.
அத்துடன், எம்மால் இன்னும் சில பாடசாலைகள் தேசிய பாடசாலையாக மாற்றவேண்டும் என்கிற கோரிக்கையும் முன்வைக்கப்பட்டுள்ளது. அதற்கான அனுமதியும் விரைவில் கிடைக்கப்பெறும்.