கொவிட் பிரிவிற்கு ஒஸ்லோ போய்ஸ் நலன்புரி அமைப்பினால் மருத்துவ உபகரணங்கள் கையளிப்பு.

நோர்வேயில் இயங்கிவரும் ஒஸ்லோ போய்ஸ் சமூக நலன்புரி அமைப்பினால் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் இயங்கிவரும் கொரொணா இடைத்தங்கல் பிரிவிற்க்கு இரண்டு தசம் இரண்டு மில்லியன் பெறுமதியான உயிர்காக்கும் இயந்திரங்கள் ஒஸ்லோ போய்ஸ் சமூக நலன்புரி அமைப்பு சார்பாக கலாநிதி ஜீ. கென்னடியால் மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் க.கலாரஞ்சினியிடம் கையளிக்கப்பட்டது.
இவற்றில் மூன்று ஒட்சிசன் செறிவாக்கல் இயந்திரங்கள் அடங்குவதுடன், மேலும் சில இயந்திரங்கள் வழங்கிவைக்கப்படவுள்ளது.
அதேவேளை மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையிலேயே மாகாணத்திலுள்ள அனைத்து கொரோணா நோயாளிகளுக்குமான பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றமை குறிப்பிடத்தக்கது.