முல்லைத்தீவு மாவட்டத்தில் வீசிய கடும் காற்றினால் 4 வீடுகள் பகுதியளவில் சேதம்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் (25) வீசிய கடும் காற்றினால் நான்கு வீடுகள் பகுதியளவில் சேதமடைந்துள்ளதுடன் பல பயன்தரு மரங்கள் முறிந்து வீழ்ந்துள்ளதாக மாவட்ட அனர்த்த முகாமைத்துவ பிரிவின் உதவிப்பணிப்பாளர் எஸ்.லிங்கேஸ்வரகுமார் தெரிவித்துள்ளார்.
மேலும் இதன்போது கருத்துத் தெரிவிக்கையில்:
ஒட்டுசுட்டான், மாங்குளம் கிராமங்களில் இரண்டு வீடுகளும், பேராற்று கிராமத்தில் ஒருவீடும், விசுவமடு தொட்டியடி பகுதியில் ஒருவீடும் பகுதியளவில் சேதமடைந்துள்ளன. இதில் இரண்டு தற்காலிக வீடுகளும், இரண்டு நிதந்தரவீடுகளுமே இவ்வாறு பகுதியளவில் சேதமடைந்துள்ளன.
மேலும் பல இடங்களில் வீசிய கடும் காற்றினால் மரங்கள் மற்றும் விவசாய தோட்டங்களுக்கும் பாதிப்புக்கள் ஏற்பட்டுள்ளன. இயற்கை அனர்த்த்தினால் மக்களுக்கு ஏற்பட்ட அழிவுகள் மற்றும் வீடு அழிவுகள் தொடர்பில் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள் நேரடியாக சென்று பாதிப்புக்கள் தொடர்பான புள்ளிவிபரங்களை திரட்டும் நடவடிக்கையில் ஈடுபட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.