‘போர்ட் சிட்டி’ சட்டத்துக்கு சபாநாயகர் சான்றுரை!

பாராளுமன்றத்தில் அண்மையில் நிறைவேற்றப்பட்ட கொழும்புத் துறைமுக நகர பொருளாதார ஆணைக்குழு சட்டமூலத்தில், சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தன இன்று கையொப்பமிட்டார்.
சட்டமூலமொன்று பாராளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டாலும், அதற்கு சபாநாயகர் சான்றுரை வழங்கிய தினத்தில் இருந்தே அந்தச் சட்டம் அமுலுக்கு வரும் என்பது குறிப்பிடத்தக்கது.