இலங்கை அணியின் வீரரை ரன் ஓட தடுக்க முயன்ற அவரது இந்த செயல்.
பங்களாதேஷ் மற்றும் இலங்கை ஆகிய அணிகளுக்கு இடையிலான மூன்று போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் பங்களாதேஷ் அணி 2க்கு 1 என்ற கணக்கில் தற்போது இந்த ஒருநாள் கோப்பையை கைப்பற்றியுள்ளது. இவ்விரண்டு போட்டிகளிலும் அந்த அணியை சேர்ந்த முஸ்பிகுர் ரஹீம் மற்றும் ஸ்பின்னர் மெஹதி ஹாசன் ஆகியோரது சிறப்பான ஆட்டத்தினால் பங்களாதேஷ் அணி இந்த வெற்றிகளை பெற்றுள்ளது.
பேட்டிங்கில் முதல் போட்டியில் 80+ ரன்களையும், இரண்டாவது போட்டியிலும் சதமடித்தும் அசத்தினார் ரஹீம், அதேபோன்று மெஹதி ஹாசன் பவுலிங்கில் இரண்டு இன்னிங்ஸ்களிலும் சேர்த்து ஏழு விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார். முதல் போட்டியில் 33 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றிபெற்ற வங்கதேச அணி 2-வது போட்டியில் டக்வொர்த் லூயிஸ் முறைப்படி 103 ரன்கள் வித்தியாசத்தில் மிகப்பெரிய வெற்றியை பெற்றது.
இந்த இரண்டாவது போட்டியில் விகெட் கீப்பிங் 1பேட்ஸ்மேன் முஸ்பிகுர் ரஹீம் 127 பந்துகளை சந்தித்து 10 பவுண்டரிகளுடன் 125 ரன்களை குவித்து வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்தார். இந்நிலையில் இந்த போட்டியில் பேட்டிங்கில் அசாத்தியமான ஆட்டத்தை வெளிப்படுத்தி பாராட்டுகளை பெற்று இருந்தாலும் வங்கதேச அணி பீல்டிங் செய்யும்போது தன்னுடைய மோசமான நடத்தை காரணமாக மீண்டும் ரஹீம் ரசிகர்களிடையே மாட்டிக்கொண்டார் .
ஏனெனில் இலங்கை வீரர் விளையாடிக் கொண்டிருக்கும்போது மெஹதி ஹசன் பந்துவீசி கொண்டிருந்தார். அப்போது பேட்டிங் செய்து கொண்டிருந்த வீரர் பந்தை தட்டி விட எதிர் முனையில் இருந்த பேட்ஸ்மேன் ரன் அடிக்க முயன்றார். இதனை கவனித்த ரஹீம் ஸ்டம்பின் இருந்து பந்தை போட்டுவிட்டு அப்படியே நிற்காதே “பேட்ஸ்மேன் ரன்னோட நினைக்கிறார், அவருக்கு முன்னர் வந்து நில்” என்று மெஹதி ஹாசனிடம் கூறினார்.
இலங்கை அணியின் வீரரை ரன் ஓட தடுக்க முயன்ற அவரது இந்த செயல் தற்போது ஸ்டம்ப் மைக்கில் தெளிவாக பதிவாகியுள்ளது. இது குறித்த வீடியோ இணையத்தில் வைரலாக தற்போது அதிக அளவில் ரஹீம் செய்த இச்செயல் விமர்சிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே பலமுறை இதேபோன்று அவர் மற்ற அணி வீரர்களை சீண்டி சர்ச்சையில் சிக்கியுள்ளது குறிப்பிடத்தக்கது.