துத்தி கீரையின் மருத்துவ பயன்கள்.

1.மலசிக்கல்

சிலருக்கு மலம் கழிக்கும்போது ஆசனவாயில் கடுப்பு மற்றும் எரிச்சலுடன் கூடிய வழி இருக்கும்.

இவர்கள் துத்தி கீரையை ஒரு கைப்பிடி எடுத்து, அதை நூறு மில்லி தண்ணீரில் கொதிக்க வைத்து பால், பணங்கற்கண்டு சேர்த்து சாப்பிட்டு வந்தால் வலி குறைந்து நல்ல பலன் கிடைக்கும்

மலச்சிக்கல் உள்ளவர்கள் துத்தி கீரையை நன்கு சுத்தமாக கழுவி, அதனுடன் பாசிப்பருப்பு சேர்த்து சமைத்து சாதத்துடன் கலந்து சிறிது நெய் சேர்த்து சாப்பிட்டு வந்தால், மலச்சிக்கல் பிரச்சனை என்பது இருக்கவே இருக்காது.

2.மூல நோய்

பொதுவாக துத்தி இலையை கிடைக்கும் பொழுது நிலர் படாமல் காயவைத்து பொடி செய்து வைத்துக் கொள்ளலாம்.

இந்தப் பொடியை தொடர்ந்து காலை மாலை ஒரு டிஸ்புன் தூளை சாப்பிட்டு வெந்நீர் குடித்து வந்தால் மூலப் புண்கள், மூலகடுப்பு போன்ற நோய்கள் முற்றிலும் நீங்கி விடும்.

மூலநோயை ஆரம்பத்திலேயே கண்டறிந்து அதற்கான மருத்துவம் எடுத்துக் கொள்வது மிக அவசியம்.

இதற்கு துத்தி இலையை எடுத்து விளக்கெண்ணெயில் வதக்கி மூலத்தில் கட்டி வந்தால் மூலத்தில் உள்ள வீக்கம், வலி மற்றும் எரிச்சல் முற்றிலும் நீங்கும்.

3.புண்கள் குணமாகும்

அதே போன்று வெப்பக் கட்டிகளின் மேல் வைத்து கட்டி வந்தால் கட்டிகள் பழுத்துஉடைந்து புண்கள் ஆறும்.
மேலும் உடலில் ஏதேனும் புண்கள் ஆறாமல் இருந்தால் இதன் இலையை பிழிந்து சாறு எடுத்து மஞ்சளுடன் கலந்து பூசி வந்தால் புண்கள் விரைவில் குணமாகும்.

பூஞ்சை நோய் காரணமாக தோலில் உண்டாகும் படர்தாமரை நோய்க்கு துத்தி இலையை அரைத்துப் பூசினால் நன்கு குணம் தெரியும்.

ஈறுகளில் இரத்தம் வடிதல்
சிலருக்கு எப்பொழுதும் பல் ஈறுகளில் இரத்தம் வடிந்து கொண்டே இருக்கும். இவர்கள் துத்தி இலையை நீரில் கொதிக்க வைத்து வாய்க் கொப்பளித்து வந்தால் பல் ஈறுகளில் இரத்தம் கசிவது உடனே நின்றுவிடும்.

4.அல்சர்

அல்சர் என்று சொல்லப்படுகின்ற குடல்புண் இருந்தால், இந்த துத்தி கீரையை வாரம் இரண்டு முறை உணவில் சேர்த்து வந்தால் போதும். குடல் புண்கள் முற்றிலும் ஆறும்.

5.சிறுநீரக நோய்

சரியாக சிறுநீர் பிரியாமல் இருந்தால், துத்தி இலையை ஜூஸ் செய்து சாப்பிட்டு வந்தால் போதும்.
நன்கு சிறுநீர் பிரிய ஆரம்பிக்கும். முக்கியமாக இது போன்ற பிரச்சனைகளால் சிறுநீரக நோய் வர வாய்ப்பு உள்ளதால், இது போன்ற எளிதான வைத்தியங்கள் மூலம் சிறுநீரக நோய்கள் வராமல் தடுக்கலாம்.

6.உடல் சூடு

துத்தி கீரை நன்கு நீரில் அலசி சிறியதாக நறுக்கி தண்ணீரில் கொதிக்க வைக்கவேண்டும். நன்கு கொதித்த பின் அதனுடன் சின்ன வெங்காயம் பூண்டு. மிளகு, தேவையான அளவு உப்பு சேர்த்து இரசமாக அருந்தி வந்தால் உடல் சூடு உடனே தணியும்.

7.பருக்கள்

துத்தி இலையையும் துத்தி பூவையும், சம அளவில் எடுத்து மை போன்று அரைத்து பருக்களின் மேல் போட்டு வந்தால் பருக்கள் மறையும்.
மேலும் பருக்களினால் ஏற்பட்ட வீக்கம், வலி நீங்கி, பருக்கள் முற்றிலும் மறைந்து விடும்.

8.எலும்பு முறிவு

உடைந்த எலும்பையும் ஒற்ற வைக்கும் தன்மை கொண்டது இந்த துத்தி கீரை. எலும்பு முறிவு ஏற்பட்டால், அந்த இடத்தில் இந்த இலையை நன்றாக அரைத்து மேலே கனமாக பூசி, அதன் மேல்
துணியை சுற்றி அசையாமல் வைத்திருந்தால், வெகு விரைவில் முறிந்த எழும்பு கூடி குணமாகும்.

Leave A Reply

Your email address will not be published.