கொரோனா கட்டுப்பாடுகளை கடுமையாக்கும் மாகாண அரசுகள் மீது ராணுவ நடவடிக்கை.
பிரேசிலில் கொரோனா கட்டுப்பாடுகளை கடுமையாக்கும் மாகாண அரசுகள் மீது ராணுவ நடவடிக்கை எடுக்கப் போவதாக அதிபர் பொல்சனாரோ எச்சரித்துள்ளார்.
இதன்படி ,ஆரம்பம் முதலே கொரோனா தொற்றை அதிபர் பொல்சொனரோ அலட்சியப்படுத்தியதால் பிரேசிலில் நான்கரை லட்சத்துக்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.
மேலும் ,ஊரடங்கால் பொருளாதாரம் கடுமையாக பாதிக்கப்பட்டதால் கட்டுப்பாடுகளைத் தளர்த்தும் படி அறிவுறுத்தி வந்த பொல்சொனரோ , மீண்டும் ஊரடங்கை தீவிரப் படுத்த திட்டமிடும் மாகாண அரசுகளை ராணுவம் மூலம் அடக்கப் போவதாக எச்சரித்துள்ளார்.