யாழ்ப்பாணத்திற்கு தடுப்பூசி எப்போது கிடைக்கும் சுகாதார அமைச்சர் வெளியிட்ட் தகவல்!
கொரோனா நோயாளிகள் பதிவாகும் உயர் ஆபத்துள்ள மாவட்டங்களில் உள்ள மக்களுக்கு தடுப்பூசி செலுத்தும் நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
அதன்படி, இரத்தினபுரி மாவட்டத்தில் நாளை (30) தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கப்பட உள்ளது. அதன் பின்னர் யாழ்ப்பாண மாவட்டத்திற்கு தடுப்பூசி செலுத்தும் திட்டம் தொடங்கப்படும் என்று சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி ஊடகங்களுக்கு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிட்டார்.
“உலகில் தடுப்பூசிகளைப் பெறுவது மிகவும் கடினம். ஒரு தடுப்பூசி கூட பெறாத 45 நாடுகள் உலகில் உள்ளன.
இலங்கையில், தடுப்பூசிக்கு முன்னுரிமை அளிக்க பல அளவுகோல்கள் பயன்படுத்தப்பட்டன. அவற்றில் ஒன்று இந்த மாவட்டங்களில் காணப்படும் நோயாளிகளின் எண்ணிக்கை, சமீபத்திய பாதிப்புகளின் எண்ணிக்கை, இறப்புகளின் எண்ணிக்கை மற்றும் அப்பகுதியின் தன்மையை பொருத்ததாகும்.
இதை கருத்தில் கொண்டு தான் எந்த மாவட்டங்களுக்கு முதலில் தடுப்பூசி போட வேண்டும் என்பதை நாங்கள் தீர்மானிக்கிறோம்.
அதன்படி, நாங்கள் தற்போது தடுப்பூசி வழங்கிவரும் மாவட்டங்களுக்கு அமைய நாளை இரத்தினபுரியில் ஆரம்பிக்கப்பட உள்ளது.
இரத்தினபுரியைத் தொடர்ந்து யாழ்ப்பாணத்திற்கு தடுப்பூசி வழங்கப்படும் என சுகாதார அமைச்சர் குறிப்பிட்டார்.