‘எக்ஸ் – பிரஸ் பேர்ல்’ கப்பலின் தீயால் கடல் வாழ் உயிரினங்கள் உயிரிழப்பு – மஹிந்த அமரவீர தெரிவிப்பு.

கொழும்புத் துறைமுகத்துக்கு அருகில் தீப்பற்றிய கப்பலின் இரசாயனப் பொருட்கள் காரணமாக கடல் வாழ் உயிரினங்கள் உயிரிழந்துள்ளனர் என்று சுற்றாடல் அமைச்சர் மஹிந்த அமரவீர தெரிவித்தார்.
உயிரிழந்த மீன்களின் பாகங்களை நாரா நிறுவனம் தொடர்ந்தும் பரிசோதித்து வருகின்றது என்றும் அமைச்சர் குறிப்பிட்டார்.
நச்சுப்பொருட்கள் காரணமாக அவை உயிரிழந்துள்ளன என்றும் முதற்கட்ட ஆய்வில் தெரியவந்துள்ளது என்றும் அவர் கூறினார்.
‘எக்ஸ் – பிரஸ் பேர்ல்’ கப்பலின் இரசாயனப் பொருட்களால் கடல் வாழ் உயிரினங்களுக்கு ஏற்பட்டுள்ள பாதிப்பு குறித்து வனஜீவராசிகள் பாதுகாப்பு திணைக்களமும் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.