ஏா் ஆம்புலன்ஸாக மாற்றப்பட்ட இந்திய கடற்படை விமானம்

இந்திய கடற்படையின் ஏஎல்ஹெச் மாா்க் 3 ரக விமானத்தில் அவசர சிசிச்சைப் பிரிவு (ஐசியு) வசதியை இந்துஸ்தான் ஏரோனாடிக்ஸ் நிறுவனம் (ஹெச்ஏஎல்) பொருத்தியுள்ளது.

இதன் மூலம் மோசமான வானிலை சமயத்தில், உயிருக்கே ஆபத்தான நிலையில் உள்ள நோயாளிகளை கடற்படை விமானம் மூலம் கொண்டு செல்ல முடியும்.

கடற்படை விமானத்தில் அமைக்கப்பட்டுள்ள இந்த ஐசியுவில் இரண்டு செட் டெஃபிரிலேட்டா்கள், மல்டி பாரா மானிட்டா்கள், வென்டிலேட்டா், ஆக்ஸிஜன் வசதி உள்பட பல வசதிகள் உள்ளன.

இந்த உபகரணங்கள் விமானத்தின் மின்வசதி மூலமாகவும் அவசர காலத்தில் பேட்டரியில் 4 மணி நேரம் வரையும் இயங்கும் திறனுள்ளவை. இந்த உபகரணங்களின் தொகுப்பை 3 மணி நேரத்தில் பொருத்தி ஒரு விமானத்தை ஏா் ஆம்புலன்ஸாக மாற்ற முடியும். இந்திய கடற்படைக்கு எச்ஏஎல் நிறுவனம் வழங்கவுள்ள 8 மருத்துவ அவசர சிகிச்சை உபகரண தொகுப்புகளில் இது முதல் தொகுப்பு என்பது குறிப்பிடத்தக்கது.

Leave A Reply

Your email address will not be published.