ஆனந்தையா தயாரித்த கொரோனா ஆயர்வேத மருந்திற்கு ஆந்திர மாநில அரசு அனுமதி! வெளியான முக்கிய அறிவிப்பு
நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்திய நெல்லூரின் கிருஷ்ணபட்ணத்தில் ஆனந்தையா தயாரித்த கொரோனாவுக்கான ஆயுர்வேத மருத்துவத்திற்கு ஆந்திர மாநில அரசு அனுமதி அளித்துள்ளது.
ஆனந்தையா கொடுத்த PLF மருந்துகளை விநியோகிக்க ஆந்திர அரசு அனுமதி அளித்துள்ளது என ஆயுர்வேத அறிவியல் ஆராய்ச்சிக்கான மத்திய கவுன்சில் (CCRAS) அறிக்கை வெளியிட்டள்ளது.
CCRAS அறிக்கையில் மருந்தைப் பயன்படுத்துவதில் எந்தத் தீங்கும் இல்லை என்று கண்டறியப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இருப்பினும், கண் சொட்டு மருந்து குறித்த அறிக்கைகள் இன்னும் வரவில்லை என்பதால் அந்த மருந்தை பயன்படுத்த வேண்டாம் என்று மாநில அரசு வலியுறுத்தியுள்ளது.
ஆனந்தையா அளித்த மீதமுள்ள மருந்துகளால் எந்தத் தீங்கும் இல்லை என்று கூறப்பட்ட அறிக்கைகளை ஆந்திர மாநில அரசு ஏற்றுள்ளது.
இருப்பினும், இந்த மருந்தைப் பயன்படுத்துவதன் மூலம் கொரோனா குறைகிறது என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை என்றும் அறிக்கைகள் கூறுகின்றன.
கண் சொட்டு மருந்துகள் குறித்து முழு அறிக்கைகள் வர இன்னும் இரண்டு முதல் மூன்று வாரங்கள் ஆகக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆனந்தையா பயன்படுத்திய மருந்தைத் தவிர வேறு மருந்துகளை உட்கொள்ள வேண்டாம் என்று மாநில அரசு மக்களிடம் வேண்டுகோள் விடுத்துள்ளது.
ஆனந்தையா மருத்துவத்திற்காக கிருஷ்ணபட்டணத்திற்கு செல்ல வேண்டாம் என்று கொரோனா நோயாளிகளை வலியுறுத்தியுள்ள அரசு, அவர்களுக்கு பதிலாக உறவினர்களிடம் சென்று மருந்து வாங்கிக் கொள்ளும்படி கேட்டுக்கொண்டுள்ளது.