மேலும் 43 பேர் மரணம் கொரோனா காவு 1484

இலங்கையில் மேலும் 43 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன என்று அரச தகவல் திணைக்களம் வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதன்படி, நாட்டில் கொரோனாத் தொற்றால் உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1484 ஆக உயர்ந்துள்ளது.
மே 20ஆம் திகதி முதல் நேற்று 31ஆம் வரையில் இந்த மரணங்கள் பதிவாகியுள்ளன. நேற்று 4 மரணங்கள் பதிவாகியுள்ளன.
அந்தவகையில், மே 20ஆம் திகதி முதல் 30ஆம் திகதி வரையில் 39 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன என்றும் அரச தகவல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதன்படி, 20ஆம் திகதி 06 பேரும், 21ஆம் திகதி ஒருவரும், 24ஆம் திகதி ஒருவரும், 25 மற்றும் 26ஆம் திகதிகளில் தலா இருவரும், 27ஆம் திகதி 06 பேரும், 28ஆம் திகதி 09 பேரும், 29ஆம் திகதி 06 பேரும், 30ஆம் திகதி 06 பேரும், 31ஆம் திகதி 04 பேரும் உயிரிழந்துள்ளனர்.