இரண்டு போப்கள்’ ( The Two Popes)
உண்மை சம்பவங்களை பின்புலனாக எடுக்கப்பட்ட திரைப்படம் ‘இரண்டு போப்புகள்’ ( The Two Popes)எனச் சொல்லப்பட்டது. சபை மேலுள்ள மக்கள் நம்பிக்கை, இரு மனிதர்களின் முரண்களையும் மீறிய நட்பு, சபைத் தலைமையின் அதிகாரம் இப்படியாக மூன்று அடுக்கு கதையை கொண்டது இத்திரைப்படம்.
போப் பெனடிக்ட் ஜெர்மனியை சேர்ந்தவர், ஆழமான அறிவாற்றல் உள்ளவர், பேராசிரியர். பாரப்மபரிய கலாச்சார கருத்தக்களால் ஆளப்பட்டவர். அர்ஜென்றீனா கர்தினலான( பிஷப்பிற்கும் மேலுள்ள அதிகார நிலை) பிரான்ஸ், போப் பெனடிக்டை சந்திக்க வந்திருக்கிறார். அவர் ஒரு யேசு துறவியும் கூட. அவர் போப்பை சந்திக்க வந்திருப்பதின் காரணம் தனக்கு கர்தினால் பதவி வேண்டாம், தன்னை ஒரு சாதாரண பாதிரியாராக பணியாற்ற அனுமதி தர வேண்டும் என்பதே.இருவரும் வெவ்வேறு கருத்தாக்கம் கொண்டோர் iருந்தாலும் தங்களால் ஏற்று கொள்ள இயலாததையும், தங்களுடைய புரிந்துணர்வால் மதித்து புரிந்து கொள்கிறார்கள். இரு வித்தியாச ஆளுமைகளான கர்தினால் பிரான்ஸ் மற்றும் போப் பெனடிக்டுக்கு இருவரும் தங்களுடைய கருத்தில் தீர்க்கமான நம்பிக்கை கொண்டவர்களாக இருக்கிறார்கள்..
அந்தோணி ஹோப்கின் மற்றும் ஜோனாத்தன் ப்ரைஸ் நடிப்பு அபாரம். இரு போப்பை பார்த்து கொண்டு இருந்தது போலவே இருந்தது. இயக்கியவர் பெர்னான்டோ ( Fernando Meirelles) காட்சி மொழியை அழகியலுடன் தந்திருப்பது அருமை. திரைக்கதை அந்தோணி மாக்கார்டென் (Anthony McCarten) , “The Pope” என்ற புத்தகத்தில் இருந்து திரைக்கதைக்கான கருவை உருவாக்கியுள்ளார்.
1. போப் பெனடிக்ட் சிரிக்க மாட்டார்,தனியாகவே இருந்து உணவு அருந்துவார், ஒரு ஹக்( hug) கூட ஏற்க இயலாத அளவிற்கு பழமைவாதி. தன்முகத்தன்மை ( introvert) கொண்டவர், லத்தீன் மொழியை மட்டுமே விரும்புகிறவர் , கோபக்காரர் நடனம் ஆட தெரியாதவர்.
உண்மையில் தூய பீட்டர் அரங்கில் தற்போதைய போப் பிரின்சிஸை விட அதிகம் மக்களை சந்தித்தவர் போப் பெனடிக்ட். பல மொழி விற்பன்னர், இசைக்கருவி மீட்டுவதில் வல்லுனர்.
போப் பெனடிக்ட் : சுவரில்லாது எப்படி வீடு உருவாகும்
பிரான்சிஸ்: தீமையின் சுவர்கள் பாலமாக மாற வேண்டும்…
இதில் பிரான்ஸிஸ் போப்பை நவநாகரீக மாற்றம் காண்பவராகவும், சுதந்திர மனிதனாகவும் , தெருவு கடையில் உணவருந்தி, சோசர் விளையாட்டு பார்த்து கொண்டு இருக்கும் நவீன மனிதனாகவும் , போப்பின் சிவப்பு ஷூவை புரக்கணிக்கும் புரட்சிவாதியாகவும் பிரகடனப்படுத்துகின்றனர். இப்படியாக இத்திரைப்படம் போப் பிரான்ஸிஸ் பக்கசார்பாக இருப்பதாக உள்ளது திரைப்படம்.
முக்கியமாக, பிரான்ஸிஸ் போப்புக்கு இளம் பாதிரியாராக இருக்கையில் அமல்யா டெமோனி என்ற காதலி இருந்ததாக காட்டுவார்கள். அது போப்பின் 12 வது வயதில் உடன் படித்த அதே வயது பள்ளித் தோழி, 12 வயது பள்ளி பாலர் காதல் கதையை ஒரு பாதிரியின் காதலியாக காட்டியிருப்பது கத்தோலிக்க பாதிரியார்கள் மேற்கொள்ளும் பிரம்மச்சரியத்திற்கு( celibacy) மிகவும் எதிரானது. இந்த பொய்மையை சேர்க்க தேவையே இல்லை.