ராஜபக்ச அரசுடன் தமிழக அரசு உறவை வலுப்படுத்த வேண்டும்! – இப்படி வலியுறுத்துகின்றார் சுப்பிரமணிய சுவாமி.

தமிழக அரசு, இலங்கையின் ராஜபக்ச அரசுடன் நட்புறவை வலுப்படுத்திக்கொள்ள வேண்டும் என்று பா.ஜ.கவின் மூத்த தலைவர் சுப்பிரமணிய சுவாமி தெரிவித்துள்ளார்.
ருவிட்டர் பதிவொன்றை வெளியிட்டு, அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
“ஸ்டாலினைத் தலைமையாகக்கொண்ட தமிழ் நாட்டு அரசு, இலங்கையின் ராஜபக்ச அரசுடன் நட்புறவை வலுப்படுத்திக்கொள்ள வேண்டும்” என்று சுப்பிரமணிய சுவாமி தெரிவித்துள்ளார்.
மேலும், “இவை அனைத்துக்கும் அப்பால், பல தி.மு.க. தலைவர்களுக்கும் தென்னிலங்கையில் சொத்துகள் இருக்கின்றன” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.