முஸ்லிம் கிராமத்திற்கு சைனோபார்ம் தடுப்பூசிகள்.

மாவத்தகம பறகஹதெனிய இல 653 கிராம உத்தியோகஸ்தர் பிரிவிலுள்ள முஸ்லிம் கிராமத்திற்கு சைனோபார்ம் தடுப்பூசிகள் வழங்கி வைக்கப்பட்டது.
மாவத்தகம சுகாதார வைத்திய அலுலகத்திற்கு உட்பட்ட பறகஹதெனிய இல 653 கிராம உத்தியோகஸ்தர் பிரிவிலுள்ள முஸ்லிம் கிராமத்திற்கு சைனோபார்ம் தடுப்பூசிகள் வழங்கும் நிகழ்வு பறகஹதெனியய தேசிய பாடசாலையில் வழங்கி வைக்கப்பட்டது.
இந்த கிராம சேவகப் பிரிவிலுள்ள பொல்வத்த, திம்பிரியாகொட்டுவ, பறகஹதெனிய பாடசாலை வீதி மற்றும் கண்டி வீதி ஆகிய பிரதேசங்களில் வாழும் மக்களுக்கு தடுப்பூசிகள் இரண்டாம் நாளாகவும் வெற்றிகரமானதாக வழங்கப்பட்டுள்ளது.
இந்தக் கிராமத்திலுள்ள 1250 பேர் அளவில் 30 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு வழங்கப்பட்டுள்ளதாக சுகாதார அதிகாரிகள் கருத்து தெரிவிக்கின்றனர்.
கொரோனா தொற்றில் இருந்து மக்களைப் பாதுகாக்க ஜனாதிபதி பிரதமர் மற்றும் சுகாதார அமைச்சு எடுத்த நடவடிக்கைகளுக்கு இப்பிரதேச முஸ்லிம் மக்கள் நன்றி தெரிவித்தமை குறிப்பிடத்தக்கது.



(இக்பால் அலி)