5000 ரூபா வழங்கும் பணிகள் ஆரம்பம் : 34 146 குடும்பங்கள் தகுதி!
முல்லைத்தீவில் 5000 ரூபா வழங்கும் பணிகள் ஆரம்பம் : 34 146 குடும்பங்கள் தகுதி!
நாட்டில் ஏற்பட்டுள்ள கொரோனா வைரஸ் அச்சுறுத்தல் காரணமாக நாடு முடக்கப்பட்டுள்ள நிலையில் நாடளாவிய ரீதியில் பயணக்கட்டுப்பாடுகள் நடைமுறைப்படுத்தப்பட்டு இருக்கின்ற நிலைமையில் நாளாந்த செலவுகளுக்கு மக்கள் அன்றாடம் போராடி வருகின்றனர்.
இந்நிலையில் அரசாங்கத்தினால் நாடளாவிய ரீதியில் 5000 ரூபா கொடுப்பனவு வழங்குகின்ற வேலைத்திட்டம் ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
இந் நிலையில் முல்லைத்தீவு மாவட்டத்திலும் (02) புதன்கிழமை 5000 ரூபா கொடுப்பனவு வழங்குகின்ற நடவடிக்கைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
முல்லைத்தீவு தெற்கு கிராம அலுவலர் பிரிவில் கொடுப்பணவு வழங்கி வைக்கும் ஆரம்ப நிகழ்வில் மேலதிக அரசாங்க அதிபர் க. கனகேஸ்வரன் மற்றும் கரைத்துறைப்பற்று பிரதேச செயலாளர் ம.உமாமகள், மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் திருமதி கணேசமூர்த்தி ஜெயபவானி, முல்லைத்தீவு தெற்கு கிராம அலுவலர், சமுர்த்தி உத்தியோகத்தர் ஆகியோர் கலந்து கொண்டு மக்களின் வீடுகளுக்கு சென்று குறித்த கொடுப்பனவுகளை வழங்கி இந் நிகழ்வை ஆரம்பித்து வைத்திருந்தனர்.
முல்லைத்தீவு மாவட்டத்தில் ஆறு பிரதேச செயலகங்களையும் உள்ளடக்கியதாக 34 146 குடும்பங்களுக்கு 5000ரூபா கொடுப்பனவு வழங்கப்படவுள்ளமை குறிப்பிடத்தக்கது.