மன்னாரில் 5000 ரூபா கொடுப்பனவு வழங்கும் நிகழ்வு.

மன்னார் மாவட்டத்தில் கொரோனோ பயணத்தடை யால் பாதிக்கப்பட்ட வறுமைக்கோட்டிற்கு கீழ் உள்ள மக்களுக்கு முதல் கட்டமாக 5000 ரூபா கொடுப்பனவு மன்னார் பெரிய கடை சமூர்த்தி வங்கி கிளையில் வைத்து இன்று (3) காலை பத்து முப்பது மணியளவில் வழங்கிவக்கப்பட்டது
மன்னார் மாவட்டத்தில் 5000 ரூபா பணம் பெற்றுக்கொள்வதற்கு தகுதியாக 33 ஆயிரத்து 500 குடும்பங்கள் தெரிவு செய்யப்பட்டுள்ளார்கள்
இதில் 23,000 பேர் ஏற்கனவே சமூர்த்தி பெறுபவர்களாக இருக்கின்றார்கள்
இந்த நிகழ்வில் மன்னார் நகர பிரதேச செயலாளர் பிரதீப் அவர்களும் மன்னார் மாவட்ட சமுர்த்தி பணிப்பாளர் திரு அலியார் சபீர் அவர்களும் மற்றும் சமூர்த்தி உத்தியோகத்தர்களும் கலந்து கொண்டார்கள்
மேலும் மன்னார் சமுர்த்தி உத்தியோகத்தர்களால் இன்று காலையிலிருந்து மக்களின் வீடுகளுக்கு சென்று ஐயாயிரம் ரூபா கொடுப்பனவுகள் வழங்கப்பட்டு வருகிறது