இதுவரை எந்தவொரு கொரோனா தொற்றினையும் உறுதிப்படுத்தப்படாத பிரதேசம்.
இலங்கை நாட்டின் கிழக்கு மாகாணத்திலுள்ள மட்டக்களப்பு மாவட்ட வடக்கு புற பிரதேசமான கோரளைப்பற்று வடக்கு வாகரை பிரதேசம் இதுவரை எந்தவொரு கொரோனா தொற்றினையும் உறுதிப்படுத்தப்படாத மக்களை கொண்ட பிரதேசமாக தன்னை வெளிகாட்டியுள்ளது.
அண்மையில் இரண்டுபேருக்கு தொற்று உறுதிப்படுத்தப்பட்ட போதும் அவர்கள் இருவரும் வாகரை பிரதேச செயலகத்தில் கடமை புரியும் வெளிபிரதேசத்தைச் சேர்ந்தவர்கள், என்பதை இவ்விடத்தில் சுட்டிக் காட்டத்தக்கது.
வாகரைப் பிரதேசத்தில் இந்த வைரஸின் தாக்கம் இன்னும் ஏற்படவில்லை என்னும் இனிப்பான செய்திக்கு காரணம் என்ன என ஆராயும் போது அந்த மக்களினது உணவு பாரம்பரியம் மறறும் கலாச்சாரம் பெரிதும் செல்வாக்குச் செலுத்துவதே காரணம்.
இன்று நாடே முடக்கம் கொண்டுள்ள சூழ்நிலையில் ஆற்றிய சோற்றிற்கு முருங்கை இலை கறியினையும், குளத்து மீன்களை மேலும் இயற்கையாக கிடைக்கும் உணவுகளையும் பெரும்பாலும் உட்கொண்டு வாழ்ந்துவரும் மக்கள் இயற்கையாகவே தமக்குள் நோய் எதிர்ப்பு சக்தியை வளர்த்துள்ளமையும் அவர்களது வாழ்க்கை முறைமையும் பிரதான காரணமாகக் கூறலாம். அத்துடன் இலங்கை அரசின் கொரோனா சட்டதிட்டங்களை கூடிய பாகம் கடைபிடிப்பதுடன் சுகாதார தரப்பினர் அரசு அதிகாரிகள் மற்றும் பாதுகாப்பு தரப்பினருக்கு ஒத்துழைத்து செயல்பட்டு வருவதையும் இங்கே விசேடமாக குறிப்பிட்டு கூற முடியும்.
எனினும், யுத்தம் மற்றும் சுனாமி அனர்த்தங்களினால் பாதிப்புற்று வாழ்க்கையை கொண்டு நடத்த போராடிக்கொண்டிருக்கும் இப்பிரதேசம் தொடர்பில் ஆரோக்கியம் மிகுந்த தகவலானது எல்லோருக்கும் மகிழ்ச்சியை கொடுக்கும் செய்தியாகவே அமைந்துள்ளது