யாழ்ப்பாணத்துக்கு மேலும் தடுப்பூசிகளை வழங்கத் தயார்! – இராணுவத் தளபதி அறிவிப்பு.
“யாழ்ப்பாணம் மாவட்ட மக்களுக்குத் தொடர்ச்சியாக கொரோனாத் தடுப்பூசிகளை வழங்குவதற்குத் தயாராகவுள்ளோம்.”
இவ்வாறு கொரோனாக் கட்டுப்பாட்டுச் செயலணியின் தலைவரும் இராணுவத் தளபதியுமான ஜெனரல் சவேந்திர சில்வா தெரிவித்தார்.
இது தொடர்பில் ஊடகங்களிடம் அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“யாழ். பல்கலைக்கழக நிர்வாகம் ஜனாதிபதியிடம் விடுத்த வேண்டுகோளுக்கு அமைவாக, ஜனாதிபதியின் பணிப்பில் 2 ஆயிரத்து 100 தடுப்பூசிகள் பல்கலைக்கழகப் பணியாளர்களுக்கு ஒதுக்கப்பட்டன.
யாழ். மக்களுக்கு ஒதுக்கப்பட்ட தடுப்பூசிகளில் யாழ். பல்கலைக்கழகத்துக்கு வழங்குவதால் பாதிப்பு எதுவும் ஏற்படவில்லை. நாங்கள் மேலும் தடுப்பூசிகளை யாழ். மாவட்டத்துக்கு வழங்குவதற்குத் தயாராக இருக்கின்றோம்” என்றார்.