ஊரடங்கில் தளர்வுகள்? – அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை

தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு, தளர்வுகள் குறித்து அதிகாரிகளுடன் முதல்வர் மு.க.ஸ்டாலின் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
தமிழகத்தில் கொரோனா தொற்றின் இரண்டாவது அலை பரவலை கட்டுப்படுத்தும் நடவடிக்கையாக மே மாதம் 10 ஆம் தேதி முதல் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதன்பின்னர் இரு வாரங்களுக்கு தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. இந்த முழு ஊரடங்கு வருகிற ஜூன் 7 ஆம் தேதி காலை 6 மணியுடன் முடிவடைய உள்ளது.
இதையடுத்து தமிழகத்தில் ஊரடங்கு நீட்டிப்பு, தளர்வுகள் குறித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் இன்று அதிகாரிகளுடன் ஆலோசனை மேற்கொண்டு வருகிறார்.
இந்த ஆலோசனிங்க் கூட்டத்தில் தலைமைச் செயலாளர் வெ.இறையன்பு, சுகாதாரத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன், டிஜிபி திரிபாதி உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளானார்.
முன்னதாக, ஊரடங்கை நீட்டித்துக்கொண்டே போக முடியாது, விரைவில் முற்றுப்புள்ளி வைத்தாக வேண்டும் என்று முதல்வர் ஸ்டாலின் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது.
அதன்படி கொரோனா பாதிப்பு குறைவாக உள்ள மாவட்டங்களில் தளர்வுகள் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.