கொரோனா தொற்று பாதுகாப்பு சீருடைகள் மற்றும் முகக் கவசங்கள் வைத்தியசாலைக்கு அன்பளிப்பு.

அக்குறணை பிரதேச சபை தவிசாளர் இஸ்திஹார் இமாதுதீன் மற்றும் சோபா சிட்டி உரிமையாளர் மர்சூக் ஆகியோரினால் ஒரு தொகை கொரோனா தொற்று பாதுகாப்பு சீருடைகள் மற்றும் முகக் கவசங்கள் கண்டி தேசிய வைத்தியசாலைக்கு அன்பளிப்பாக வழங்கி வைத்தனர்.
அதன் போது அக்குறணை பிரதேச சபை தவிசாளர் இஸ்திஹார் இமாதுதீன் கண்டி தேசிய வைத்தியசாலை பிரதிப் பணிப்பாளர் திருமதி இரேஷா பெர்னாந்து அவர்களிடம் பொருட்கள் கையளிக்கப்பட்டது.
வைத்தியசாலை அபிவிருத்தி சங்க உறுப்பினர்களும் நிகழ்வில் கலந்து சிறப்பித்தனர்.
(இக்பால் அலி)