கொவிட் 19 பரவலை கட்டுப்படுத்தும் முன்களப் பணிகளிற்கான பொருட்கள் வழங்கிவைப்பு.
முல்லைத்தீவு மாவட்ட செயலாளர் க.விமலநாதன் மற்றும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்தியர் ம.உமாசங்கர் அவர்களின் வேண்டுகோளிற்கு அமைவாக , மாவட்ட செயலகத்தில் 04.06.2021 அன்று ரூபா 200000/=ற்கு மேற்பட்ட பெறுமதியான கிராம சேவகர்களின் சுய பாதுகாப்பிற்கான முகக்கவசம், கைகளை சுத்தம் செய்யும் திரவம் மற்றும் முல்லைத்தீவில் அமைக்கப்பட்டுள்ள கொவிட் 19 நோயாளிகளின் சிகிச்சை நிலையத்திற்கான குளிர்சாதனப் பெட்டி போன்ற அத்தியாவசிய பொருட்கள் விஜய்பவுன்டேசன் சுவிஸ் நிதி உதவியுடன் ஓஹான் நிறுவன செயலாளர் சு.ஜெயச்சந்திரன் அவர்களால் மாவட்ட செயலாளர் க.விமலநாதன், பிராந்திய சுகாதார சேவைகள் திட்டமிடல் பணிப்பாளர்வைத்தியர்.சத்தியரூபன் ஆகியோரிடம் கையளிக்கப்பட்டது.
இந்நிகழ்வில் மாவட்ட உதவி செயலாளர் திருமதி.லிசோ கேகிதா, திட்டமிடல் பணிப்பாளர் கிருபாசுதன், மற்றும் ஓஹான் நிறுவன நிகழ்ச்சித்திட்ட உத்தியோகத்தர் இ.திவாகர், நிர்வாக உத்தியோகத்தர் ப.அமுதவாசன், வாழ்வாதார உத்தியோகத்தர் லோ.கனீசியஸ்,வோய்ஸ் நிறுவன திட்ட முகாமையாளர் அ.ஸ்டெவின் ஆகியோர் கலந்து கொண்டனர்.
கடந்த 28.05.2021ஆம் திகதி அன்று 175 200/= பெறுமதியான அத்தியாவசிய பொருட்கள் முல்லைத்தீவு மாவட்ட கொவிட் 19 நோயாளிகளின் சிகிச்சை நிலையத்திற்கு வழங்கி வைக்கப்பட்டமையும் குறிப்பிடத்தக்கது.