Airtel இன் புதிய அறிவிப்பு – வாடிக்கையாளர்களுக்கு மகிழ்ச்சி
கொரோனாவின் இரண்டாம் அலை காரணமாக நாடும் முழுவதும் பல மாநிலங்களில் மீண்டும் அமல்படுத்தப்பட்டுள்ள லாக்டவுன் மற்றும் கட்டுப்பாடுகள் காரணமாக பலர் வேலைக்கு செல்ல முடியாமல் தவித்து வருகின்றனர். ஆனால் அதே நேரத்தில் கடந்த ஆண்டை போலவே இந்த ஆண்டும் வீட்டிலிருந்தே அலுவலக வேலைகளை செய்து முடிப்போரின் எண்ணிக்கை சமீபமாக அதிகரித்துள்ளது. இந்நிலையில் இந்தியா முழுவதும் ஏர்டெல் எக்ஸ்ட்ரீம் ஃபைபர் பிராட்பேண்ட் இணைப்பு சேவைகளை வழங்கி வரும் பாரதி ஏர்டெல் நிறுவனம், தனது எக்ஸ்ஸ்ட்ரீம் ஃபைபரின் அதிவேக வைஃபை ரவுட்டர்களின் ஒரே கனக்ஷனில் சுமார் 60 டிவைஸ்களை இணைக்க முடியும் என்று அறிவித்துள்ளது.
வொர்க் ஃப்ரம் ஹோம், ஆன்லைன் வகுப்புகள் மற்றும் லாக்டவுன் நேரத்தை பொழுதுபோக்குடன் கழிக்க என ஒரே வீடுகளில் ஒரே நேரத்தில் 10 முதல் 12 டிவைஸ்களை பயன்படுத்தும் சூழல் நிலவி வருகிறது. இதில் ஸ்மார்ட் ஃபோன்கள், லேப்டாப்கள், ஸ்மார்ட் டிவிகள், ஸ்ட்ரீமிங் சாதனங்கள், ஸ்பீக்கர்கள், ஸ்மார்ட் உபகரணங்கள் மற்றும் செக்யூரிட்டி சிஸ்டம்ஸ் உள்ளிட்டவை அடங்கும்.
ஒரு குடும்பத்திடம் அதிவேக ஃபைபர் பிராட்பேண்ட் கனக்ஷன் இருந்தாலும், மேற்கண்டவாறு ஒரே நேரத்தில் ஏராளமான டிவைஸ்களை ஸ்ட்ரீமிங் செய்வதால், வாடிக்கையாளர்கள் ஸ்லோ நெட் ஸ்பீட் உள்ளிட்ட பல சிக்கல்களை எதிர் கொள்கின்றனர். வாடிக்கையாளர்களின் இந்த சிக்கலை தீர்ப்பதற்கு, ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஃபைபர் ஒரே ஒரு FTTH (Fiber to the Home) கனெக்ஷன் மூலம் ஒரே நேரத்தில் 60 டிவைஸ்களை இணைக்க கூடிய அதிநவீன அதிவேக வைஃபை ரவுட்டர்களை பாரதி ஏர்டெல் அறிமுகப்படுத்தியுள்ளது.
இது அன்லிமிடட் டேட்டாவை அதிகபட்சம் 1Gbps வரையிலான ஸ்பீடில் வழங்கும் என்று தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. தங்களது ஏர்டெல் எக்ஸ்ஸ்ட்ரீம் ஃபைபரில் சிறந்த ஒத்திசைவு மற்றும் ஒரே நேரத்தில் பல சாதனங்களை பயன்படுத்த கூடிய அம்சம் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது பற்றி மக்களிடம் கொண்டு சேர்க்க, பாரதி ஏர்டெல் நிறுவனம் “ஒரே நேரத்தில் 60 சாதனங்களுக்கான இணைப்பு” (Connectivity for up to 60 devices at once ) என்ற புதிய விளம்பரம் ஒன்றை அறிமுகப்படுத்தி உள்ளது.
ஒரே நேரத்தில் 60 டிவைஸ்கள் வரை பயன்படுத்த கூடிய இந்த ஸ்கீமிற்கு மாதாந்திர கட்டணம் ரூ.3,999 என்று கூறியுள்ளது ஏர்டெல் நிறுவனம். அதிவேகத்தில் அதிக இணைப்புகளை வாடிக்கையாளர்களுக்கு வழங்க தேவையான வைஃபை ரவுட்டர்களை, பிரபல வைஃபை ரவுட்டர் உற்பத்தியாளரான Dasan-னிடமிருந்து வாங்கி உள்ளது ஏர்டெல்.
இந்த மேம்பட்ட 4×4 வைஃபை ரவுட்டர் 1 ஜிபிபிஎஸ் வேகத்தை வழங்குவதை உறுதி செய்கிறது. மேலும் இதன் மூலம் ஒரே நேரத்தில் ஸ்மார்ட்போன்கள், டேப்லெட்டுகள், லேப்டாப்கள், ஸ்மார்ட் டிவிகள், ஸ்மார்ட் வீட்டு உபகரணங்கள், கேமிங் கன்சோல்கள் உள்ளிட்ட 60 டிவைஸ்களை வடிக்கையாளர்கள் ஸ்ட்ரீமிங் செய்து கொள்ளலாம் என்று கூறி உள்ளது.