கேகாலை பகுதியில் அதிக மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
இன்று காலை 7 மணி வரையிலான 24 மணத்தியாளங்களில் கேகாலை முடகமுவ பகுதியில் அதிக மழை வீழ்ச்சி பதிவாகியுள்ளது.
இங்கு 201 மில்லிமீட்டர் மழை வீழ்ச்சி பதிவாகியிருப்பதாக வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.
அல்காமா பகுதியில் 192.5 மி.மீ மழை பதிவாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
மாத்தளை பிரதேசத்தில் 147 மி.மீட்டரும் வரக்காபொலயில் 138 மி.மீட்டரும் நுவரெலியா களுகல பிரதேசத்தில் 120.5 மி.மீட்டரும் மழை பெய்துள்ளது.இதேவேளை இன்றைய தினம் நாட்டின் பெரும்பாலான பிரதேசங்களில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை பெய்யும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் தெரிவித்துள்ளது.மேல் சப்ரகமுவ மாகாணங்களில் 100 மில்லி மீட்டர் மழை பயிற்சியை எதிர்பார்க்க முடியும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது வடமேல் மத்திய மாகாணங்களில் காலி மாத்தறை மன்னார் யாழ்ப்பாணம் மாவட்டங்களிலும் இடியுடன் கூடிய மழை வீழ்ச்சி பதிவாகும் என்று வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.
இதற்கிடையில் ஏற்கனவே குறைந்து வந்த நதிகளின் நீர்மட்டம் தற்சமயம் அதிகரித்து வருவதாக நீர்ப்பாசனத் திணைக்களம் அறிவித்துள்ளது. ஜின் கங்கையின் நீரேந்து பிரதேசங்களில் நேற்று பெய்த மழை காரணமாக தற்சமயம் நீர்த்தேகங்களின் நீர் மட்டம் அதிகரித்து வருகிறது பெந்தரை கங்கையின் நீர்மட்டமும் அதிகரித்திருக்கிறது இதனால் அருகிலுள்ள நீர் நிலைகளில் நீர் மட்டமும் அதிகரித்திருப்பதாக எமது ஊடக அதிகரிகள் தெரிவித்துள்ளனர். மத்திய மலைநாட்டில் பெய்து வரும் அடை மழையினால் கொத்மலை நீர்த்தேக்கத்தின் இரண்டு வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளன லக்சபான நீர்த்தேக்கத்தின் ஒரு வான் கதவு திறக்கப்பட்டுள்ளது.
கொழும்பு சிலாபம் பிரதான வீதியில் மை குளம் பிரதேசத்தில் மரம் ஒன்று முறிந்து விழுந்து உள்ளமையினால் போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
களு கங்கை களனிகங்கை அத்தனக்கல்ல ஒய ஆகிய பிரதேசங்களிலும் கூடுதலான மழை வீழ்ச்சி இடம்பெற்றுள்ளது. புளத்சிங்ஹல பாலிந்தநுவர மில்லெனிய ஆகிய பிரதேசங்களில் தாழ்நிலப் பகுதிகளில் வசிக்கும் மக்களுக்கு வெள்ள எச்சரிக்கை அபாயமும் விடுக்கப்பட்டுள்ளது