கொரோனாவால் மேலும் 40 பேர் சாவு! – மொத்தக் காவு 1,696

இலங்கையில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட மேலும் 40 பேர் உயிரிழந்துள்ளனர்.
இதனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் உறுதிப்படுத்தியுள்ளார் என்று அரச தகவல் திணைக்களம் இன்றிரவு அறிவித்துள்ளது.
இதற்கமைய நாட்டில் கொரோனாத் தொற்றால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 1,696 ஆக உயர்வடைந்துள்ளது.