தமிழ் மொழியை புறக்கணிப்புச் செய்த நிறுவனத்திற்கு எச்சரிக்கை.மனோகனேசன்.
தமிழை புறக்கணித்த நிறுவனத்திற்கு
மனோ கணேசன் எம்.பி எச்சரிக்கை.
திருந்துங்கள் அல்லது போராட்டத்தை எதிர்கொள்ளுங்கள் என தமிழ் மொழியை புறக்கணிப்புச் செய்த நிறுவனத்திற்கு தமிழ் முற்போக்குக் கூட்டணியின் தலைவரும், நாடாளுமன்ற உறுப்பினரும் மனோ கணேசன் தெரிவித்துள்ளார்.
பட்டர் பக்கட்டில் தமிழ் மொழி புறக்கணிப்புச் செய்திருந்த விவகாரம் தொடர்பிலேயே அவர் இவ்வாறு கருத்து வெளியிட்டுள்ளார்.
மனோ கணேசன் தனது அதிகாரபூர்வ டுவிட்டர் கணக்கில் இது தொடர்பில் டுவிட்டர் பதிவொன்றை இட்டுள்ளார்.
நியூசிலாந்து தயாரிப்புக்களான பட்டர் மற்றும் பால் உற்பத்திகளை இலங்கையில் விற்பனை செய்யும் பொன்டெரா நிறுவனம் மும்மொழிக் கொள்கை என்பதனை பிழையாக புரிந்து கொண்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
சிங்களம், ஆங்கிலம் மற்றும் சீன மென்ட்ரின் மொழிகளை இலங்கையின் மூன்று மொழிகளாக பொன்டெரா நிறுவனம் தவறாக புரிந்துகொண்டுள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இந்த பிழையை குறித்த நிறுவனம் திருத்திக் கொள்ள வேண்டும் அல்லது போராட்டங்களை அந்த நிறுவனம் எதிர்நோக்க நேரிடும் என மனோ கணேசன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.