ஏறாவூர் – 02 கிராம உத்தியோகத்தர் பிரிவு தனிமைப்படுத்தல்.

மட்டக்களப்பு ஏறாவூர் நகர் பிரதேச செயலக பிரிவிற்குட்பட்ட ஏறாவூர் – 02 கிராம உத்தியோகத்தர் பிரிவானது 05.06.2021 ஆந் திகதி முதல் தனிமைப்படுத்தலுக்கு உட்படுத்தப்படுவதாக மட்டக்களப்பு மாவட்ட அரசாங்க அதிபரும் மாவட்ட கொவிட் தடுப்பு செயலணியின் தலைவருமாகிய கணபதிப்பிள்ளை கருணாகரன் தெரிவித்தார்.
குறித்த கிராம உத்தியோகத்தர் பிரிவில் அதிகளவிலானோர் கொவிட் 19 தொற்றாளர்களாக இனங்காணப்பட்டதனைத் தொடர்ந்து
மாவட்ட கொவிட் தடுப்பு செயலணியினால் 05.06.2021 சனிக்கிழமை மேற்கொள்ளப்பட்ட
தீர்மாணத்திற்கு அமைவாகவே குறித்த பகுதி தனிமைப்படுத்தப்படுவதாக அரசாங்க அதிபர் மேலும் தெரிவித்திருந்தார்.